நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய ‘ஆஸ்திரேலியா டுடே’ ஊடகத்துக்கு கனடாவில் தடை

சென்னை: 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனான நேர்காணலை ஒளிபரப்பிய ‘ஆஸ்திரேலியா டுடே’ ஊடகத்துக்கு கனடாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து ஆஸ்திரேலியா டுடே ஊடக நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் ஜிதார்த் ஜெய் பரத்வாஜ் கூறுகையில், “மக்களிடம் சொல்ல வேண்டிய செய்திகளை சொல்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எத்தனை தடை வந்தாலும் நாங்கள் எங்களது நிலைப்பாட்டில் நிற்போம். பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் வகையில் எங்களுக்கு இந்நேரத்தில் ஆதரவு கிடைத்துள்ளது. தொடர்ந்து வெளிப்படைத்தன்மையுடன் நாங்கள் செயல்படுவோம்” என்றார்.

ஆஸ்திரேலிய நாட்டில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நேர்காணலில் பங்கேற்றார். அதில் இந்தியா - கனடா இடையேயான உறவு குறித்தும், கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதம் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதை ஆஸ்திரேலியா டுடே ஒளிபரப்பியது.

இந்நிலையில், வியாழன் அன்று கனடா அந்த ஊடக நிறுவனத்தை தடை செய்தது. 

இந்தியா - கனடா இடையேயான கசப்பான உறவுக்கு மத்தியில் இது நடந்துள்ளது.

தங்கள் நாட்டை குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டதால் அந்த ஊடகத்துக்கு தடை விதிக்கப்பட்டதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதல்ல. பொய்யான கருத்துகளை பரப்புவோருக்கான எச்சரிக்கை என்று கூறப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset