நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்வழி பிற நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்குக் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்

சிங்கப்பூர்:

சாங்கி விமானம் வழி செல்லும் பயணிகளுக்குக் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட உள்ளது.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் வழியாகச் செல்லும் பயணிகளும் விமான நிறுவனங்களும் அடுத்த ஆறாண்டுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது சேவைகளையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த மூன்று பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி முதலீடு தேவை என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.

அந்தப் பணத்தைத் திரட்டக் கட்டண உயர்வு அவசியம் என்று குழுமம் குறிப்பிட்டது.

கூடுதல் நடைமுறைச் செலவுகளையும் அது சுட்டிக்காட்டியது.

விமான நிலையக் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்.

உதாரணத்திற்கு சாங்கியிலிருந்து புறப்படுவோருக்கான பயணிகள் சேவை, பாதுகாப்புக் கட்டணம் 2027 ஏப்ரல் முதல் நான்கு ஆண்டுகளுக்கு உயரும்.

அந்த உயர்வு ஆண்டுக்கு மூன்று வெள்ளியாக இருக்கும்.

விமானங்களைத் தரையிறக்கும் கட்டணங்களும் உயர்த்தப்படும்

முனையங்களுக்கு இடையே கூடுதல் ரயில்கள், கூடுதல் பயணப் பதிவு முகப்புகள், வருகையாளர் குடிநுழைவுப் பகுதிகளின் விரிவாக்கம் முதலிய மேம்பாடுகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

+ - reset