நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டிரம்ப மீண்டும் அதிபராக தேர்வு: ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இன்று கூடுகின்றனர்

வாஷிங்டன்: 

அமெரிக்காவின் 47ஆவது அதிபராக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றிப்பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றிய நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இன்று புடபெஸ்ட் நகரில் கூட்டம் நடத்துகின்றனர். 

வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்பிய டிரம்ப் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்னென்ன என்பது குறித்து இரு நாட்கள் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் இயூ தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர். 

அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவின் கொள்கைகள் ஐரோப்பிய ஒன்றியம் மீது ஏற்படப்போகும் தாக்கங்கள், சவால்கள் குறித்தும் வினவப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார் 

முன்னதாக, கடந்த நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றிப்பெற்றார் 

தன்னை எதிர்த்து போட்டியிட்ட கமலா ஹாரிசை அவர் தோற்கடித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset