நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டொனால்ட் டிரம்ப் வெற்றியால் டெஸ்லா பங்குகள் 12% உயர்வு 

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். 

இதனால் உலகம் முழுவதில் பெறும் மாற்றங்கள் நிகழ தொடங்கியுள்ளன. 

இந்நிலையில் அவரது ஆதரவை பெற்ற உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான் மஸ்க்கிற்கும் பெரிய லாபம் ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக அவரது நிறுவனமான டெஸ்டாவின் பங்குகள் சுமார் 12% வரை அதிகரித்துள்ளன.

இது டொனால்ட் டிரம்ப் தேர்தல் வெற்றி டெஸ்லாவின் மிகப்பெரிய பங்குதாரரும், முக்கிய டிரம்ப் ஆதரவாளருமான எலோன் மஸ்க்கிற்கு பயனளிக்கும் என்று கூறப்படுகிறது. 

தற்போதைய லாபங்கள் இருந்தபோதிலும், டெஸ்லாவின் பங்கு இந்த ஆண்டு ஒட்டுமொத்த சந்தை குறியீடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் முழுவதும், எலான் மஸ்க் டிரம்பை ஆதரித்து வந்தார். 

அத்துடன் அவர் நிதி பங்களிப்புகளையும் செய்து வந்தார். பங்குச் சந்தை நேற்று சரிந்த போதிலும் டெஸ்லாவின் பங்குகள் 3.5% ஏற்றம் கண்டது. 

ஆறு நாள் இழப்பு தொடர் முடிவுக்கு வந்தது. சமீபத்திய லாபங்கள் இருந்தபோதிலும், டெஸ்லாவின் பங்கு இந்த ஆண்டு ஒட்டுமொத்த சந்தை குறியீடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset