நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சீமானை விமர்சிக்க வேண்டாம்: தவெக தலைவர் விஜய்

சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான விமர்சிக்க வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளார்.

நடிகர் விஜய் கட்சித் தொடங்குவதற்கு முன்பு சீமானுடன் சேர்ந்து அரசியலில் ஈடுபடுவார் என்று கருதப்பட்டது.

ஆனால், விஜய்யின் திராவிடமும் - தமிழ் தேசியமும் ஒன்று என்ற கொள்கைக்கு சீமான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மேலும், விஜய்யின் அரசியில் நிலைப்பாட்டை அவர் விமர்சனமும் செய்தார்.

இந்நிலையில், தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் தலைமையில் அக் கட்சியின் மாநில செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய விஜய், கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து மக்களிடம் தீவிர பிரசாரம் செய்ய வேண்டும். கூட்டணி குறித்து பிறகு ஆலோசிப்போம்.

சீமான் உள்ளிட்ட தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சிக்க வேண்டாம். குறிப்பாக அதிமுக மீதான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.

தவெக மீதான விமர்சனங்களுக்கு ஆதாரத்துடன் உடனுக்குடன் பதிலளிக்க வேண்டும் என்றார்.

மேலும், நீட் தேர்வை ரத்து, தமிழகத்தில் மதுக் கடைகளை காலநிர்ணயம் செய்து மூட வேண்டும்,

வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு, மறைந்த கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் விருது வழங்க வேண்டும் என் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 26 தீர்மானங்களை தவெக மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்
+ - reset