செய்திகள் தமிழ் தொடர்புகள்
திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறு மலேசியாவில் இருந்து தாயகம் திரும்பிய பெண் நடுவானில் உயிரிழப்பு
சென்னை:
வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற பெண் உடல் நலக்குறைவால் தாயகம் திரும்பிய போது நடுவானில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராசாத்தி என்பவர் மலேசியாவில் துப்புறவு பணியாளராக வேலை செய்து வந்தார்.
அங்கு அவருக்கு திடீரென நுரையீரல் பாதிக்கப்பட்டு நோய் தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து நேற்று மலேசியா விமான நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போதே ராசாத்திக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு விமானத்தின் இருக்கையில் அமர்ந்தபடியே உயிரிழந்துள்ளார்.
ஏற்கெனவே தந்தை உயிரிழந்த நிலையில், தற்போது தாயும் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் ஆதரவின்றி நிற்கும் 4ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு மாவட்ட நிர்வாகம் உதவிட கோரிக்கையும் எழுந்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2026, 3:44 pm
மதுரை கயல்விழியைக் கரம்பிடித்த கைலாய மாப்பிள்ளை
April 27, 2026, 9:45 pm
புதுச்சேரியில் ஃபிரெஞ்சு மொழி நீக்கம்: ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு வைகோ கடும் கண்டனம்
April 27, 2026, 5:37 pm
திருச்சியில் பட்டப்பகலில் நகை மதிப்பீட்டாளரை கட்டிப்போட்டு ஒரு கிலோ நகை கொள்ளை
April 27, 2026, 4:51 pm
சென்னை காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதும் மக்கள்
April 26, 2026, 10:02 pm
தமிழகத்தில் ஏப்.30 முதல் மே 2 வரை கனமழைக்கு வாய்ப்பு
April 25, 2026, 4:49 pm
கைதிகளை அழைத்துச் செல்லும் போலீஸ் வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள்
April 25, 2026, 4:11 pm
பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு இன்னும் ஓராண்டுக்கு தடை: தமிழக அரசு உத்தரவு
April 24, 2026, 1:04 pm
