நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்து அரசாங்கம் இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை அறிவித்துள்ளது

பேங்காக்:

தாய்லாந்து அரசாங்கம் இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை அறிவித்துள்ளது.

இதன் மூலம் இந்திய குடிமக்கள் நீண்ட நாட்கள் விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்கலாம்.

2024-ஆம் ஆண்டின் நவம்பர் 11-ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த விசா தளர்வு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின் படி இந்தியர்கள் தாய்லாந்தில் விசா இல்லாமல் 60 நாட்கள் வரை தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

உள்ளூரிலிருக்கும் குடிநுழைவு துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து 30 நாட்களுக்கு உங்களுடைய வருகையை  நீட்டிக்கலாம்.

இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை நீட்டித்திருக்கும் காரணத்தினால் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்ல திட்டமிடும் இந்தியர்களுக்கு சுற்றுலா செல்வது மிகவும் எளிதாக மாறியுள்ளது.

ஆவணங்களே இல்லாத புதிய நடைமுறையின் காரணமாக 2024-ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரையில் இந்தியா சுற்றுலா பயணிகளின் வரத்து 16.17 மில்லியனாக அதிகரித்துள்ளது.

விசா இல்லாத நுழைவு காரணமாக வாரயிறுதி விடுமுறையைப் பயன்படுத்தி தாய்லாந்துக்குச் செல்லும் இந்தியர்களும் அதிகரித்துள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset