நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அதிபர் தேர்தலுக்குத் தயாராகும் அமெரிக்க மக்கள்

வாஷிங்டன்:

அமெரிக்க மக்கள் அதிபர் தேர்தலில் வாக்களிக்கத் தயாராகின்றனர்.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணையதிபர் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

இருவரும் இறுதிக் கட்டப் பிரசாரத்தில் வாக்காளர்களைக் கவரத் தீவிரமாக முயல்கின்றனர்.

நார்த் கரோலைனாவில் பேசிய டிரம்ப், மெக்சிகோவிலிருந்து குடியேறிகள் வருவதை நிறுத்தாவிட்டால் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் எல்லாப் பொருள்களுக்கும் 25 விழுக்காடு வரி விதிக்க எண்ணுவதாகக் கூறினார்.

பென்சில்வேனியாவில் (Pennsylvania) நான்கு இடங்களில் பிரசாரம் செய்த திருவாட்டி ஹாரிஸ், அமெரிக்கா புதிய தொடக்கத்துக்குத் தயாராயிருப்பதாகத் தெரிவித்தார். 

சக அமெரிக்கர்களை எதிரிகளாகக் கருதாமல் அண்டை வீட்டுக்காரர்களாக மதிக்கும் புதிய பாதையில் செல்ல அமெரிக்கா தயாராவதாக கமலா ஹாரிஸ் கூறினார்.

வேட்பாளர்கள் இருவரும் பிட்ஸ்பர்க்கில் பேரணி நடத்தவுள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset