நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷ்ய ராணுவத்திற்கு தளவாட உதவி: 15 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

வாஷிங்டன்:

ரஷ்யாவின் ராணுவ-தொழில்துறை தளத்திற்கு உதவியளித்ததாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உட்பட 275 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. 

உக்ரைன் மீதான போரை தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவுக்கு ராணுவ ரீதியிலும், ராணுவத்திற்கு தேவையான தடவாளங்கள் தயாரிப்பு ரீதியாகவும் உதவும் நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களை பட்டியலிட்டு அமெரிக்கா தடை விதித்து உள்ளது.

இதில் இந்தியாவை சேர்ந்த அபார் டெக்னாலஜிஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (அபார்), டென்வாஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (டென்வாஸ்), எம்சிஸ்டெக், கேலக்சி பியரிங் லிமிடெட், ஆர்பிட் பின்ட்ரேட் எல்எல்பி (ஆர்பிட்), இன்னோவியோ வென்ச்சர்ஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட், குஷ்பு ஹானிங் பிரைவேட் லிமிடெட் (குஷ்பு), லோகேஷ் மெஷின்ஸ் லிமிடெட் (லோகேஷ்), பாயிண்டர் எலக்ட்ரானிக்ஸ், ஆர்ஆர்ஜி இன்ஜினியரிங் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்,

ஷார்ப்லைன் ஆட்டோமேஷன் பிரைவேட் லிமிடெட் (ஷார்ப்லைன்), சவுர்யா ஏரோநாட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (சவுர்யா), ஸ்ரீஜி இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஸ்ரீஜி), ஸ்ரேயா லைப் சயின்சஸ் பிரைவேட் லிமிடெட் (ஸ்ரேயா) உள்பட 15 நிறுவனங்களுக்கு தடை விதித்து உள்ளது. 

உலகம் முழுவதும் 275 நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை உக்ரைன் போர் தொடர்பாக 400 நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு அமெரிக்கா தடை விதித்து உள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset