நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஐ.நா. நல அமைப்புக்கு இஸ்ரேல் தடை

ஜெருசலேம்:

அகதிகளுக்கான ஐ.நா. நல அமைப்புக்கு UNRWA தடை விதிப்பதற்கான இரு சட்டங்களை இஸ்ரேல் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

இதையடுத்து காஸாவில் உள்ள அந்த அமைப்பின் கட்டடங்கள் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது.

முன்னதாக, UNRWA அனைத்து நடவடிக்கைகளும் 90 நாள்களுக்குள் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் மசோதா இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஆதரவாக 92 வாக்குகள் பதிவாகின. மசோவை எதிர்த்து 10 எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்தனர்.

A new idea for the day after Gaza | All Israel News

மேலும் UNRWA-  வை  பயங்கரவாத அமைப்பாகவும் இஸ்ரேல் நாடாளுமன்றம் அறிவித்தது.

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரையில் 43,061 பேர் உயிரிழந்துள்ளனர்; 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர், காஸாவில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் மிக முக்கிய அமைப்பான UNRWA  இஸ்ரேல் தடைவிதித்துள்ளதற்கு அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், ஸ்லோவேனியா, அயர்லாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset