செய்திகள் மலேசியா
பிரதமர் அன்வார் கலந்துகொண்ட மடானி தீபாவளி விருந்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்
கோலாம்பூர்:
மடானி தீபாவளி விருந்தில் கலந்து கொண்ட உரையாற்றிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மடானி அரசாங்கம் இன மத பேதமில்லாமல் அனைத்து மலேசியர்களுக்கும் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது என்றார். இந்த தீபத்திருநாள் அனைவரின் வாழ்விலும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும் என தெரிவித்தார்.
முன்னதாக உரையாற்றிய இலக்கியவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பல்வேறு அம்சங்களில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட முன்முயற்சிகள், ஒதுக்கீடுகள் இந்திய சமூகம் உட்பட மக்களுக்கு பலனளித்துள்ளன என்று இல்லகவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ கூறினார்.
சமீபத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த பட்ஜெட் 2025ல், மனித மூலதனத்தைப் பாதுகாக்கவும், சமூக, நலன் சார்ந்த அம்சங்களை மேம்படுத்தவும், இந்திய சமூகத்திற்கான வணிக நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு RM130 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்ததன் மூலம் இது தெளிவாகிறது என்றார்.
இந்திய கிராமங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒருங்கிணைப்பு முயற்சிகளையும் பிரதமர் வலியுறுத்தினார். இதேபோல், அனைத்து இன மக்களுக்கும் தெக்குன் நேஷனல் மூலம் நிதி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், அமானா இக்தியார் மலேசியாவின் கீழ் உள்ளவர்கள் இப்போது இந்திய சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளனர்.
இயக்கவியல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 2024 மடானி தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பின்போது அவர் தனது உரையில் அவர் இவ்வாறு கூறினார்.
மடானி தீபாவளி திறந்த உபசரிப்பில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர் அஹமத் ஜாஹித் ஹமிடி, போக்குவரத்துத் துறை அந்தோணி லோக், தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஃபஹ்மி பாட்சில் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்களுடன் 7,000க்கும் மேற்பட்ட வருகையாளர்கள் கலந்து கொண்டனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
October 31, 2024, 1:44 pm
மலேசிய மக்களின் மகிழ்ச்சி என்றென்றும் தொடர வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 31, 2024, 1:29 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு பிரதமர் கலந்து கொண்டு சிறப்பித்தார்
October 31, 2024, 9:40 am
மடானி அரசாங்கத்தின் திட்டங்களின் வாயிலாக வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
October 31, 2024, 12:40 am
தீபாவளி பண்டிகை 2024: பேரரசர் தம்பதியர் வாழ்த்து
October 30, 2024, 1:57 pm
தீபாவளி திருநாளை புத்துணர்வுடனும் தூய சிந்தனையுடனும் கொண்டாட வேண்டும்: பிரதமர்
October 30, 2024, 1:23 pm
தீபத் திருநாள் இந்திய சமுதாயத்திற்கு மேலும் பல உருமாற்றங்களை கொண்டு வர வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 30, 2024, 11:44 am
1 எம்டிபி ஊழல் வழக்கில் தற்காப்பு வாதம் புரிய நஜிப்பிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
October 30, 2024, 11:41 am