நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் தீபாவளியை கொண்டாட 2 நாளில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம்: சென்னை சாலைகள் நிலைகுத்தின

சென்னை:

தீபாவளியையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்து, ரயில்கள் வாயிலாக சென்னையில் இருந்து 2 நாட்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணமாகினர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.28 முதல் 30-ம் தேதி வரை சென்னையிலிருந்து நாள்தோறும் இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 4,900 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து 11,176 பேருந்துகள், பிற ஊர்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,910 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.
 
சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், 2 ஆயிரம் பயணிகள் அமர இருக்கை, இலவச மருத்துவமனை, ஆம்புலன்ஸ், பாதுகாப்புக்காக காவல் அதிகாரிகள், 3 மடங்கு அதிகமாக தூய்மைப் பணியாளர்கள், 8 ஏடிஎம் இயந்திரங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் 18 இயந்திரங்கள், தாய்மார்கள் பாலூட்ட 3 அறைகள், இலவச ட்ராலிகள், 140 தங்குமிடம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிலையங்களிலும் முன்பதிவு மையம், உதவி மையம், பயணிகளுக்கான அடிப்படை வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த 3 பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் 24 மணி நேரமும் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன. 

இத்தகைய ஏற்பாடுகளுடன் நேற்று முன்தினம் முதல் சிறப்பு பேருந்துகளின் இயக்கம் தொடங்கியது. 

அன்றைய தினம் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளும் 369 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இவ்வாறு இயக்கப்பட்ட 2,461 பேருந்துகளில் 1 லட்சத்து 10,475 பயணிகள் பயணித்திருந்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்
+ - reset