நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

குஜராத்தில் முதல் தனியார் விமான ஆலை

வதோதரா:

குஜராத் மாநிலம் வதோதராவில்  இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான தயாரிப்பு ஆலையான டாடா ஆலை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஆலையை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், பிரதமர் நரேந்திர மோடி  ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்திய விமானப் படைக்கு C295 விமானங்கள் இங்கு தயாரிக்கப்பட உள்ளன.

ஸ்பெயினின் ஏர்பஸ் நிறுவனத்துடன் சுமார் ரூ.21,000 கோடி மதிப்பீட்டில் 56 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதன்படி 16 விமானங்களை உடனடியாகவும்,  40 விமானங்களை ஏர்பஸ் -டாடா நிறுவனங்களும் சேர்ந்து இந்தியாவில் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அடுத்த 2 ஆண்டுகளில் இந்த விமானங்கள் உற்பத்தி முடிவடைந்து வெளியாகும் என்று ஸ்பெயின் பிரதமர் தெரிவித்தார்.

c295 போர் விமானம் என்பது ஒரு நடுத்தர ராணுவப் போக்குவரத்து விமானமாகும்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset