நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா

வயநாடு:

கேரள மாநிலம், வயநாடு எம்.பி. இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல் காந்தி ஆகியோரும் உடனிருந்தனர்.
வேட்புமனு தாக்கலுக்கு முன்பு கல்பேட்டா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு ராகுல், பிரியங்கா பங்கேற்ற வாகனப் பேரணி நடைபெற்றது.

ராகுலும் பிரியங்காவும் திறந்த வாகனத்தில் இருந்துகொண்டு மக்களை நோக்கி கையசைத்தவாறு சென்றனர்.

அப்போது பேசிய பிரியங்கா, தனது தந்தை ராஜீவ் காந்திக்காக கடந்த 1989ம் ஆண்டு  17வது வயதில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதில் தொடங்கி எனக்கு 35 ஆண்டுகால அரசியல் அனுபவம் இருக்கிறது என்று கூறினார்.

ராகுல் பேசுகையில், எனது தந்தை இறந்த பிறகு  அம்மாவை  பிரியங்காதான் கவனித்துக்கொண்டார்.

வயநாடு மக்களும் அவரது குடும்பமே. வயநாட்டு மக்களின் பிரச்சனைகளுக்கு நானும் தீர்வு காண்பேன் என்றார். பிரியங்கா காந்தி தனக்கு ரூ.12 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset