செய்திகள் உலகம்
இலங்கையில் சுற்றித் திரியும் இஸ்ரேலியர்கள்: தாக்கப்படலாம் என்று காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை
கொழும்பு:
இலங்கை அருகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போலிஸார் தெரிவித்துள்ளனர்.
அருகம்பே சுற்றுலா பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள்,விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போலிஸ் ஊடகப் பேச்சாளர், நிஹால் தல்துவா, புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களும் பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
அருகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் சர்ஃபிங் செய்வதால் (Surfing season) இஸ்ரேலியர்கள் அதிகம் சுற்றித் திரிவதாகவும் அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் எனவும் தகவல் கிடைத்துள்ளதாக நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பில் அல்லது வேறு எந்த பிரதேசத்திலும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றதாக புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும், மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் போலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.
“அந்த அருகம்பே பகுதியில் இஸ்ரேலியர்கள் நிறுவிய கட்டிடம் உள்ளது. ஒருவித மண்டபம் போன்ற இடமும் உள்ளது. இஸ்ரேலியர்கள் அருகம்பே பகுதிக்கு அடிக்கடி ஈர்க்கப்படுகிறார்கள்.
பொத்துவில் அருகம்பே. குறிப்பாக சர்ஃபிங் செய்வதால். இஸ்ரேலியர்கள் அந்த பகுதியை விரும்புகிறார்கள். அதனால்தான் அவர்கள் அங்கு இஸ்ரேலியர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என்று தகவல்கள் கிடைத்தன. அதனால்தான் அந்த பகுதிக்கு சாலை தடுப்புகளை வைத்து அவ்வப்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றது என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2024, 4:32 pm
16 வயதுக்குக் குறைவானவர்களுக்குச் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு தடை விதிக்க ஆஸ்திரேலியா திட்டம்
November 21, 2024, 1:23 pm
இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக டாக்டர் ரிஸ்வி சாலி தேர்வு
November 21, 2024, 11:12 am
கைத்துப்பாக்கியைக் கொண்டு நாயைப் பயமுறுத்திய உணவு விநியோகிப்பாளருக்கு 130 ரிங்கிட் அபராதம் விதிப்பு
November 21, 2024, 11:09 am
ரஷ்யா- அமெரிக்கா இடையே போர்ப்பதற்றம் அதிகரிப்பு: கியேஃப்பில் தூதரகத்தை மூடியது அமெரிக்கா
November 21, 2024, 10:43 am
14 பேரைச் சயனைடு விஷம் கொடுத்துக் கொன்ற தாய்லாந்து பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
November 21, 2024, 10:42 am
ஜாகுவார் நிறுவனம் புதிய லோகோவுக்கு மாறுவதாக அறிவித்துள்ளது
November 19, 2024, 6:09 pm
கனடாவில் மாணவர்களுக்கான விசா திட்டம் ரத்து
November 19, 2024, 11:37 am
7 வயது சிறுவனுக்கு மென்பொருள் நிறுவனத்தில் வேலை
November 19, 2024, 9:43 am