நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் வீட்டுக்காவல் மசோதா தாக்கல் செய்யப்படும்: சைஃபுடின் நசுத்தியோன் 

பெட்டாலிங் ஜெயா: 

சில குற்றங்களுக்கு மாற்றுத் தண்டனையாக வீட்டுக் காவலை அனுமதிக்கும் புதிய மசோதா அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இன்று கிளந்தான், மச்சாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், தற்போது சட்டத்துறை அலுவலகமும் சிறை துறையும் இணைந்து அதற்கான வரைவைத் தயார் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

மசோதா இயற்றப்பட்டதும், அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன் அமைச்சரவையில் சமர்ப்பிப்போம் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். 

கைதிகள் வீட்டுக் காவலில் சிறைத் தண்டனையை அனுபவிக்க சட்டப்பூர்வ ஏற்பாடுகள் இல்லை என்றாலும், சிறைச்சாலைச் சட்டம் 1995 இன் பிரிவு 43, ​​உள்துறை அமைச்சரின் எந்தவொரு ஒழுங்குமுறைக்கும் உட்பட்டு உரிமத்தில் விடுவிக்கப்படுவதற்கு அனுமதிக்கிறது.

சிறை அதிகாரிகள் வீட்டுக் காவலுக்கான நிபந்தனைகளை அமைத்து கண்காணிப்பார்கள்.இது தண்டனைக்கு அவர்கள் இணங்குவதை உறுதி செய்யும் என்று பிரதம அன்வார் முன்னதாக கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset