நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களின் வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே மடானி அரசாங்கத்தின் முதன்மை இலக்கு: டத்தோஸ்ரீ ரமணன்

சுங்கை பூலோ:

மக்களின் வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே மடானி அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனைக் கூறினார்.

கோத்தா டாமன்சாராவில் தேசிய கூட்டுறவு ஆணையத்தின் ஏற்பாட்டில்  மடானி விற்பனை நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

வழக்கம் போல் மக்களுக்காக 50% தள்ளுபடியை  அறிவித்ததில் பெரும் மகிழ்ச்சி. 

இதன் மூலம் சுங்கை பூலோவில் உள்ள மடானி விற்பனை தான் மலேசியா முழுவதிலும் மிகவும் மலிவான விற்பனை இடமாக விளங்குகிறது.

சுங்கை பூலோ மக்கள் பயன் பெறும் நோக்கில் தான் இம்முயற்சி மேற்கோள்ளப்பட்டது.

அதே வேளையில் மடானி அரசாங்கம் அனைத்து இனத்தினருக்கும் வாழ்க்கைச் செலவைக் கையாள்வதில் சுமையைக் குறைப்பதில் மிகவும் அக்கறையுடனும் உறுதியுடனும் உள்ளது.

மேலும் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மலேசியர்களின், குறிப்பாக பி40 பிரிவினரின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காகத் திட்டமிடப்பட்ட பல முயற்சிகளை தெளிவாக நிரூபிக்கிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த  2025 வரவு செலவுத் திட்டத்தின் அறிவிப்புக்கு இணங்க, 

இந்த நாட்டில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் வறுமையை ஒழிப்பதற்கும் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதில் அரசாங்கம் எப்போதும் உறுதியுடனும் உள்ளது.

அதன் அடிப்படையில் தான் 421 பில்லியன் ரிங்கிட்டுடன் அறிவிக்கப்பட்ட இந்த ஆண்டு பட்ஜெட் மலேசிய வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட் ஆகும்.

மேலும் இது மக்களின் பொருளாதாரத்திற்கு உதவுவதற்கும் வலுவூட்டுவதற்கும் அரசாங்கத்தின் உறுதியை காட்டுகிறது என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset