நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் முன்னோக்கி செல்ல வேண்டும்; கீழறுப்பு நடவடிக்கைகள் வேண்டாம்: டத்தோ இப்ராஹிம் ஷா

பெட்டாலிங்ஜெயா:

மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் தொடர்ந்து முன்னோக்கி செல்ல வேண்டும்.

அதனால் அந்நிறுவனத்திற்கு எதிரான கீழறுப்பு நடவடிக்கைகள் வேண்டாம் என்று அதன் தலைவர் டத்தோ இப்ராஹிம் ஷா  கூறினார்.

மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனத்தின் 32-ஆவது பேராளர் மாநாடு இன்று நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் அதிகமான பேராளர்கள் கலந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.

பல சர்ச்சைகளில் இருந்து மீண்டு மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் தற்போது சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது, பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் உட்பட பல நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்.

அதே வேளையில் உறுப்பினர்களின் நலனுக்காக பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனத்திற்கு எதிராக தேசிய கூட்டுறவு ஆணையத்தில் திரிபுனல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளை எதிர்கொள்ள மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் தயாராக உள்ளது.

ஆனால் இதுபோன்ற வழக்குகளால் மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனத்திற்கும் அதன் உறுப்பினர்களுக்கும் தான் பாதிப்பு.

ஆகவே முன்னோக்கி வரும் மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனத்திற்கு எதிராக கீழறப்பு நடவடிக்கைகள் வேண்டாம் என்று டத்தோ இப்ராஹிம் ஷா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset