நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் ஈப்போ ஸ்ரீ மஹா முனிஸ்வரர் ஆலயத்தின் 68-ஆம் ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது

கோலாலம்பூர்:

தலைநகர் ஜாலான் ஈப்போ ஸ்ரீ மஹா முனிஸ்வரர் ஆலயத்தின் 68-ஆம் ஆண்டு திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

காலை முதல் முனிஸ்வரருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

சிறப்பு பூஜைகளுக்குப் பின் அனைத்துப் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

சுற்று வட்டாரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

மஇகா தகவல் பிரிவுத் தலைவரும் உமாராணி குழுமத்தின் தலைவருமான டத்தோ ஏகே இராமலிங்கம் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இத்திருவிழாவில் சிறப்பு வருகையாளராக கலந்துக் கொண்டார்.

மஇகா உதவித் தலைவர்களான டத்தோ முருகையா, டான்ஸ்ரீ ராமசாமி, தலைமை செயலாளர் டத்தோ ஆனந்தன், கட்டிடக் குழுத் தலைவர் டத்தோ ரவிச்சந்திரன், மத்திய செயலவை உறுப்பினர்களான டத்தோ ராஜா, டத்தோ எஸ்எம் முத்து உட்பட பல பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset