
செய்திகள் தமிழ் தொடர்புகள்
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன
சென்னை:
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் அரசு, அரசு உதவி, தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள், முதல் பருவ தேர்வுகள் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்படுகின்றன. இதையொட்டி, பள்ளி வளாகங்களில் தூய்மை பணிகள், இதர பராமரிப்பு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தேர்வு விடைத்தாள்களை முதல் நாளான இன்றே மாணவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். 2-ஆம் பருவத்துக்காக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள பாட நூல்களையும் உடனே வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 28, 2024, 10:53 am
பிளவுவாதிகள், ஊழல் பேர்வழிகள் தான் நமது முதன்மையான அரசியல் எதிரிகள்: அனல் பறந்த தவெக தலைவர் விஜய்யின் உரை
October 27, 2024, 12:30 pm
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கையை QR கோடு மூலம் பதிவு செய்ய ஏற்பாடு
October 27, 2024, 10:41 am
விக்கிரவாண்டியில் இன்று தவெக முதல் மாநாடு கொள்கையை அறிவிக்கும் விஜய்
October 27, 2024, 10:38 am
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு: அதிகாலை முதலே அதிகமான தொண்டர்கள் வருகை
October 22, 2024, 12:31 pm
பெங்களூர், ராமநாதபுரம் நகரங்களுக்கு சென்னையில் இருந்து பண்டிகைக்கால சிறப்பு ரயில்கள்
October 20, 2024, 6:52 am
ஒன்றிய அரசின் 33% வரி காரணமாக தமிழகத்தில் தீபாவளி இனிப்புப் பலகார விலைகள் கடும் உயர்வு
October 19, 2024, 4:52 pm
தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதியும் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
October 16, 2024, 5:44 pm