நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் இக்வானுக்கு சொந்தமான 1.35 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 206 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன: ஐஜிபி

கோலாலம்பூர்:

குளோபல் இக்வானுக்கு சொந்தமான 1.35 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 206 வங்கிக் கணக்குகளை போலிசார் முடக்கியுள்ளனர்.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் இதனை கூறினார்.

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குளோபல் இக்வானுக்கு எதிரான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக குளோபல் இக்வானுடன் இணைக்கப்பட்ட மொத்தம் 206 கணக்குகளை முடக்கப்பட்டுள்ளது.

இதில் 1.35 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 205 வங்கி கணக்குகளூடன் 1,344.26 அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒரு வங்கி கணக்கும் அடங்கும்.

அம்லா சட்டத்தின் கீழ் குளோபல் இக்வான் தொடர்பான வங்கி கணக்குகள், சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

மேலும் 31 கார்கள், பேருந்துகளுடன் 19 நிலங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset