நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

DMY CREATIONS நிறுவனத்தின் தோற்றுநர் டத்தோ முஹம்மத் யூசுஃப்பின் புதல்வர் திருமணம்: கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு வருகை 

கோலாலம்பூர்: 

பிரம்மாண்டத்தின் அடையாளம் DMY CREATIONS நிறுவனத்தின் தோற்றுநரும் நிர்வாகியுமான டத்தோஶ்ரீ முஹம்மத் யூசுஃப்பின் புதல்வர் ஃபஜ்ருல் ரஹ்மான் அவர்களின் திருமணம் வைபவம் எதிர்வரும் அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது 

இந்த திருமண விழாவுக்கு கோலிவுட்டைச் சேர்ந்த முன்னணி நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆ.ரஹ்மான், அவரின் மகனும் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.அமீன், ஜி.வி.பிரகாஷ் குமார், நடிகர் சூரி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். 

மேலும், மலேசிய கலைஞர்கள், சமூக ஊடக பிரபலங்கள், பிரமுகர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தவுள்ளனர். 

பிரபல வயலின் கலைஞர் மனோஜ் குமார் இந்த திருமண விழாவில் ஒரு பிரம்மாண்டமான படைப்பினை வழங்கவுள்ளார் அதுமட்டுமல்லாமல், சன் நெட்வர்க் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் பிரபல வர்த்தகருமான கலாநிதி மாறனும் கலந்து சிறப்பிக்கவுள்ளார் 

#DMYVEETUKALYANAM என்ற ஹேஸ்தெக் மூலமாக சமூக ஊடகங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். அனைவரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துமாறு DMY CREATIONS நிறுவனத்தின் தோற்றுநரும் தலைவருமான டத்தோ முஹம்மத் யூசுஃப் ஓர் அறிக்கையின் வாயிலாக கேட்டுகொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset