செய்திகள் தமிழ் தொடர்புகள்
திருச்செந்தூர் கோயில் உண்டியலில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஒரு ரூபாய் நாணய மாலை
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அதன்படி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் வசந்த மண்டபத்தில், கோயில் தக்கார் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் எண்ணப்பட்டது.
உண்டியல்கள் எண்ணும் பணியில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக்குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப் பணிக் குழுவினரும் கோயில் பணியாளர்களும் ஈடுபட்டனர்.
இந்த உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில், ரூ.5,15,89,834 ரொக்கப் பணம், 2,352 கிராம் தங்கம், 41,998 கிராம் வெள்ளி, 61,600 கிராம் பித்தளை, 5,129 கிராம் செம்பு, 13,739 கிராம் தகரம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 1,589 என பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
வழக்கைத்தைவிட உண்டியலில் 1 ரூபாய் நாணயங்களால் கோர்க்கப்பட்ட நாணய மாலையை பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியிருந்தார். இந்த ஒரு ரூபாய் நாணய மாலையை பக்தர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 3, 2024, 9:15 pm
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு
December 2, 2024, 4:08 pm
ஏற்காடு செல்லும் பாதையில் மண் சரிவு: போக்குவரத்து துண்டிக்கப்பட்டது
December 2, 2024, 3:48 pm
அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை
December 2, 2024, 12:28 pm
திருவண்ணாமலை மண்சரிவு: இடிபாடுகளில் சிக்கிய 7 பேரின் நிலை என்ன?
December 2, 2024, 9:44 am
மலேசியாவில் இருந்து கடத்தப்பட்ட 55 பல்லிகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
November 30, 2024, 9:25 am
புயல் எச்சரிக்கை: பாதுகாப்பாக வீடுகளில் இருங்கள்
November 29, 2024, 10:40 pm
சென்னையில் உள்ள பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்: மாநகராட்சி வேண்டுகோள்
November 28, 2024, 10:32 pm