நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

விடாமுயற்சி படம் தொடர்பான அப்டேட்டை வெளியிட்ட நடிகர் அர்ஜூன்: அஜித் ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: 

2024ஆம் ஆண்டின் மாபெரும் வெற்றித் திரைப்படமாக உருவாகி கொண்டிருக்கும் நடிகர் தல அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் குறித்து நடிகர் அர்ஜூன் தற்போது விருது விழா ஒன்றில் பகிர்ந்துள்ளார். 

அவ்வகையில், நடிகர் தல அஜித்குமாரின் விடாமுயற்சி படம் இன்னும் 60 அல்லது 90 நாட்களில் வெளியாகும் என்றும் கூடிய விரைவில் லைக்கா நிறுவனம் அறிவிக்கும் என்று சொன்னார். படத்தின் இறுதி காட்சிகள் தான் படமாக்கப்பட்டு போஸ்ட் புரோடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் சொன்னார். 

இதை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து போனார்கள். தல தரிசனம் இவ்வாண்டு நிச்சயம் உண்டு என்று இதன்வழி ரசிகர்கள் அறிந்து கொண்டனர். 

2023ஆம் ஆண்டு வெளியான துணிவு படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்குமார், தடம் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனியுடன் கைக்கோர்த்தார்.  விடாமுயற்சி படத்தில் நடிகர்கள் ஆரவ், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆகியோர் நடித்துள்ளர். 

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்த வேளையில் அனிருத் இசையமைத்துள்ளார். விடாமுயற்சி படத்தின் 80 விழுக்காடு படப்பிடிப்பு அசர்பைஜான் நாட்டில் எடுக்கப்பட்டதாகும்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset