நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

‘ஆட்சியில் உள்ளவர்களிடம் கோரிக்கை வைத்தால் அவமானப்படுத்தப்படுகின்றனர்’: நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் கண்டனம்

கோவை: 

கோவை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி குறித்துகேள்வி எழுப்பிய ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதி அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கோரியதாக வெளியான வீடியோ சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது. இதுதொடர் பாக அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் உரிமையாளர், நமது அரசு ஊழியர்களிடம் எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி முறையை கோரும்போது, ​​அவரது கோரிக்கை ஆணவத்துடனும், அவமரியாதையுடனும் எதிர்கொள்ளப்படுகிறது. 

ஆனால், ஒரு கோடீஸ்வர நண்பர் விதிகளை வளைக்க, சட்டங்களை மாற்ற, தேசிய சொத்துகளை பெற முற்படும்போது, ​​அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறார் பிரதமர் மோடி. 

மக்கள் சொல்வதைக் கேட்டு, ஒரே வரி விகிதத்துடன் கூடிய எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியை இந்த அரசு செயல்படுத்தினால், லட்சக்கணக்கான வணிகர்களின் பிரச்சினைகள் தீரும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்
+ - reset