நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

15 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி, வைகைப்புயல் வடிவேலு 

சென்னை: 

சுந்தர்.சி. மற்றும் வடிவேலு இணைந்தாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இவர்கள் கூட்டணியில் உருவான ‘வின்னர், ‘தலைநகரம்’, ‘நகரம்’ போன்ற படங்களின் காமெடிக் காட்சிகள் மக்கள் மத்தியில் இன்றும் மறக்க முடியாதவையாக உள்ளன.

இப்படங்களில் வரும் காமெடி காட்சிகளை கொண்டு தினமும் விதவிதமான ‘மீம்ஸ்கள்’ வலம் வருகின்றன.

இந்நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர்.சி. மற்றும் வடிவேலு கூட்டணி இணையும் படத்திற்கு ‘கேங்கர்ஸ்’ என தலைப்பு வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் கேத்ரீன் தெரசா, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset