செய்திகள் தமிழ் தொடர்புகள்
வயநாடு நிலச்சரிவால் களையிழந்த ஓணம் பண்டிகை: தமிழக பூ விவசாயிகள் வேதனை
கோவை:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் களையிழந்ததால், தமிழக பூ விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கேரளத்தில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது, ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து அதிக அளவிலான பூக்கள் அனுப்பி வைக்கப்படும். ஓணம் பண்டிகையின்போது மலர்களின் விலையும் அதிகரிக்கும் என்பதால் நல்ல லாபமும் கிடைக்கும்.
ஆனால், இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடப்படாது என்று கேரள அரசு அறிவித்திருந்தது. ஓணம் கொண்டாட்டத்தை தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின்போது, கோவையில் பூ விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பிசியான நேரமாகவும் இருக்கும். கடந்த ஆண்டு மட்டும் 110 டன் மலர் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு வெறும் 15 டன் மலர் மட்டுமே அனுப்பிவைக்கப்பட்டுளள்து. கடந்த ஆண்டு மாரிகோல்டு பூ ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனையானது, ஆனால் இந்த ஆண்டு 30 கிலோ பூவே ரூ.150 முதல் ரூ.200 வரைதான் விற்பனையாகியிருக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளனர் விவசாயிகள்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், மலர் விவசாயத்துக்குப் புகழ்பெற்றது. இங்கு பூக்கும் மலர்கள் கேரளம் உள்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது.
ஆனால், கேரள மாநில அரசின் முடிவால், தமிழக பூ விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருக்கிறது. பூ விவசாயத்துக்கு செலவிட்ட மூன்றில் ஒரு பங்கு தொகை கூட கிடைக்கவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.
ஆறு மாதங்களுக்கு முன்பே, திட்டமிட்டு வாடாமல்லி பூ விளைச்சல் செய்யப்பட்டது. இது ஓணம் பண்டிகையின்போது அதிக தேவை இருக்கும் பூ. ஆனால், இந்த ஆண்டு தேவை குறைந்ததால், விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கவில்லை.
கேரளத்தில் மிகப்பெரிய நிறுவனங்கள், கல்வி மையங்கள் போன்றவை, அரசின் உத்தரவால் ஓணம் கொண்டாடாமல் விட்டுவிட்டதால், இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 20, 2024, 6:06 pm
திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறு மலேசியாவில் இருந்து தாயகம் திரும்பிய பெண் நடுவானில் உயிரிழப்பு
November 20, 2024, 12:50 pm
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி மீது அடுத்தடுத்து கைது நடவடிக்கை
November 18, 2024, 5:25 pm
அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டம்
November 17, 2024, 4:31 pm
ஹைதராபாத்தில் கைதான நடிகை கஸ்தூரி இன்று சென்னை அழைத்து வரப்படுகிறார்
November 16, 2024, 11:55 am
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை, திருச்சி, மதுரையிலிருந்து விரைவு பேருந்துகள் சேவை தொடக்கம்
November 13, 2024, 7:43 am
கவிக்கோ நினைவலைகள்
November 12, 2024, 2:04 pm
இன்று சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை: பலத்த மழைக்கு வாய்ப்பு
November 11, 2024, 4:20 pm
பாஜகவுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை; இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு: ஜெயக்குமார்
November 10, 2024, 2:50 pm
தெலுங்கர்களை அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவு
November 10, 2024, 9:13 am