நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர் புறப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் 

சென்னை: 

விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து 4.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்து, ரயில்களில் கூட்டம் அலைமோதியது.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக கடந்த 2 நாட்களுக்கும் மேலாகபொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்த வண்ணம் இருக்கின்றனர். 

குறிப்பாக விரைவு பேருந்துகளின் முன்பதிவு எண்ணிக்கை புதியஉச்சத்தை அடைந்தது. கிளாம்பாக்கத்தில் இருந்து சென்ற பேருந்துகளில் இரவு வரை மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், நேற்றும் பேருந்து, ரயில்களில் கூட்டம் அலைமோதியது. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள், முக்கிய பேருந்து நிறுத்தங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதையொட்டி, கோயம்பேடு - மதுரவாயல் சாலையில் பிற்பகல் முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்தது. 

இதைத்தவிர்த்து விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்ததால் முக்கிய சாலைகளில் நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset