நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னைக்கு நேரடி விமான சேவையை தொடங்குகிறது புருணை ஏர்லைன்ஸ்

சென்னை: 

ராயல் புருணை ஏர்லைன்ஸ் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளது. 

முன்பு ராயல் புருணை  ஏர்லைன்ஸ்  சென்னைக்குத் தனது நேரடி விமான சேவையை முதல் முறையாக துவங்கியுள்ளது. 

முன்னதாக, ராயல் புருணை ஏர்லைன்ஸ் 2004 இன் இறுதி வரை கொல்கத்தாக்கு விமான சேவைகளை நடத்தியது. ஆனால் அதன் பின்பு பல காரணங்களுக்காக இந்தியாவுக்கான விமான சேவையை நிறுத்தி வைத்திருந்தது. 

இதற்கிடையில் கொரோனா தொற்று காலத்தில் புருணை நாட்டில் இருந்து இந்தியாவுக்கு சிறப்பு விமான சேவைகளை மட்டும் அளித்து வந்தது. 

புருணை நாட்டின் தலைநகர் பண்டார ஸ்ரீ பகவான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நவம்பர் 5, 2024 அன்று முதல் விமான சேவையை தொடங்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. 

ஒரு ஏர்பஸ் A320 விமானம் வாரத்திற்கு மூன்று முறை இரண்டு நகரங்களுக்கு இடையே பயணிக்க உள்ளது. இந்த ஏர்பஸ் விமானம் புருணை சர்வதேச விமான நிலையத்திலிருந்து செவ்வாய், வியாழக்கிழமைகளில் இரவு 8:00 மணிக்கு புறப்படும். 

வியாழக்கிழமைகளில் சென்னையிலிருந்து இரவு 11:50 மணிக்கு  திரும்பும். இதேபோல்  சனிக்கிழமைகளில் காலை 12:30 மணிக்கு  சென்னையிலிருந்து புறப்படும். இந்த விமானம் வியாழக்கிழமை காலை 4:20 மணிக்குச் சென்னையில் இருந்து புறப்படும். 

இறுதி நேரத்தில் அட்டவணையில் நேர மாற்றங்கள் இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

பகிர்
+ - reset