நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மலேசியாவில் இந்திய சமுதாயத்தினர் பல நூற்றாண்டுகளாக முருகன் புகழ் பாடி வாழ்ந்து வருகின்றனர்: டத்தோஸ்ரீ சரவணன்

பழனி:

மலேசியாவில் இந்திய சமுதாய மக்கள் பல நூற்றாண்டுகளாக முருகன் புகழ் பாடி வாழ்ந்து வருகின்றனர் என்று மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

தமிழக அரசின் ஏற்பாட்டில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்று வருகிறது.

இம்மாநாட்டில் 'அடியார்க்கு அருளும் அழகன்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய அவர்,

இந்த முருகப் பெருமான் மாநாடு உலக பக்தர்களை ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் மாநாடாக இது அமைந்துள்ளது.

அதை ஏற்பாடு செய்த தமிழ்நாட்டு அரசுக்கு பாராட்டுகள்.

தமிழ்நாட்டுக்கு அப்பால் மலேசியாவில் இந்திய சமுதாயத்தவர் பல நூற்றாண்டுகளாக முருகன் புகழ் பாடி வாழ்ந்து வருகின்றனர்.

அதிலும் மலேசியாவிற்கு மிகப் பெரிய  பெருமையாக பத்துமலை முருகன் சிலை விளங்குகிறது.

மலேசியா என்றாலே திருமுருகன் சிலை கண்டிப்பாக பேசப்படும். 

அந்த வகையில் இந்த மாநாட்டின் வழி  முருகன் புகழ் பாடும் வகையில் அனைவரும் இணைந்துள்ளது மிக பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்
+ - reset