நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தால் வருத்தமும் கோபமும் அடைந்துள்ளேன்: துன் மகாதீர்

கோலாலம்பூர் -

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதை அறிந்து தாம் வருத்தமும் கோபமும் அடைந்துள்ளதாக முன்னாள் துன் மகாதீர் முஹம்மத் கூறினார்.

இஸ்ரேல்,ஒரு நயவஞ்சகமான நாடு என்பதும் உண்மையான பயங்கரவாதிகள் அங்குதான் உள்ளனர் என்பதையும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இஸ்மாயில் மென்மையாகப் பேசக்கூடியவர்தான் ஆனால் சிங்கத்தைப் போன்ற இதயம் கொண்டவர். இறைவன் அவருக்கு உயர்ந்த சுவர்க்கத்தை வழங்க நான் பிரார்த்திக்கிறேன் என்று மகாதீர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிராக பாலஸ்தீன விடுதலைக்காக போராடுவதில் இஸ்மாயிலின் இடைவிடாத முயற்சிகள் ஒவ்வொரு சுதந்திர போராட்ட வீரரும் பின்பற்ற வேண்டிய ஒன்று என்று துன் மகாதீர் கூறினார்.

அதே வேளையில் இஸ்ரேல்  ஒரு  முரட்டு இனப்படுகொலையை செய்துவரும் நாடு என்று வர்ணித்த மகாதீர், இஸ்மாயிலுக்கு நடந்தது சியோனிச ஆட்சியின் ஆணவத்தையும் கொடுமையையும் காட்டுகிறது என்றார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset