நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை: எடப்பாடி கே. பழனிசாமி

தூத்துக்குடி:

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என, முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். 

இதுதொடா்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: 

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. நிகழாண்டு இதுவரை தமிழகத்தில் 595 கொலைகள் நடந்துள்ளன. இதற்கு, அதிகரிக்கும் போதைப் பழக்கமும் காரணமாகும். இதனால், இளைஞா்கள், மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வரும் போதைப் பொருள்கள் நடமாட்டத்தைத் தடுக்க எடுக்க வேண்டும். காவல் துறைக்கு அரசு முழு சுதந்திரம் கொடுத்து சட்டம்-ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். 

திருநெல்வேலியில் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா், சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரின் கொலை வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை. இதை வன்மையாக கண்டிக்கிறோம். மொத்தத்தில் தமிழகத்தில் பொதுமக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பில்லை.

மத்திய அரசு தமிழகத்துக்குத் தேவையான நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி திமுகவினா்  ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆனால், தமிழ்நாட்டைச் சோ்ந்த ஒருவா் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, எத்தனை பெரிய திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தனா் என்பதை சிந்திக்க வேண்டும்.

திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனா். வரும் தோ்தல்களில் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு குறைந்து வருகிறது. எனவே, மக்களை திசைதிருப்பவே திமுக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. 

அதிமுக ஆட்சியில் சேலத்தில் கட்டப்பட்ட கால்நடைகளுக்கான பிரத்யேக பூங்கா இன்னும் திறக்கப்படவில்லை. அந்தப் பூங்கா திறக்கப்பட்டிருந்தால் கால்நடை மருத்துவ மாணவா்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பாா்கள். அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் என்ற ஒரே காரணத்துக்காக அது முடக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டப்படாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறாா். இதை ஊடகங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும்.

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்றாா் அவர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset