நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கே.எல்.ஐ.ஏ 1,2 முனையங்களில் குடிநுழைவு வசதிகள் கூடுதலாக செய்து தரப்படும்

கோலாலம்பூர்: 

பயணிகளின் வசதிக்காக கோலாம்பூர் அனைத்துலக விமான நிலையம் 1, 2 ஆகிய முனையங்களில் குடிநுழைவு வசதிகள் கூடுதலாக செய்து தரப்படும் என்று தேசிய குடிநுழைவு துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜுசோ கூறினார். 

விமான நிலையங்களில் கூடுதலாக 40 தானியங்கள் கதவுகள் செயலாக்கம் வசதி அமைத்து தரப்படும். 

இந்த தானியங்கி நுழைவாயில் என்பது பயணிகளின் நெரிசலைக் குறைக்கும் வேளையில் 2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் மலேசியா கூட்டத்திற்குப் பெரும் பங்காற்றும் என்று அவர் தெரிவித்தார் 

நடப்பில் கே.எல்.ஐ.ஏ 1,2 யில் 10 தானியங்கி நுழைவாயில்களும் 40 முதன்மை நுழைவாயில்கள் உள்ளதாக அவர் சொன்னார். 

நடப்பில் உள்ள கியூ ஆர் முறையினால் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் மலேசியாவிற்குள் நுழைந்துள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset