செய்திகள் கலைகள்
தீபாவளிக்கு வெளியாகிறது நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம்: ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு
சென்னை:
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமரன் திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் முகுந்தன் என்ற கதாப்பாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமரன் வெளியாகிறது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கும் விதமாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 4:45 pm
இசைஞானி இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சரிகமா இந்தியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
September 7, 2026, 9:47 pm
உலக அழகி போட்டி: மலேசிய தமிழ்ப் பெண் தனுசியாவுக்கு 3-ஆம் இடம்
September 6, 2026, 4:19 pm
‘அரசன்’ திரைப்படம் கோலிவுட்டுக்கு பெருமை சேர்க்கும்”: சிலம்பரசன் நம்பிக்கை
September 5, 2026, 12:07 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்: எப்போதும் ஸ்பெஷலான கோம்போ
September 5, 2026, 11:57 am
ONDRA RENDA 25 YEARS OF GVM இசை நிகழ்ச்சி: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய திரைப்படங்கள் குறித்த பார்வை
September 3, 2026, 1:55 pm
