நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

சர்தார் 2 படப்பிடிப்பில்  20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழப்பு 

சென்னை: 

நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தது. படக்குழுவினர் சண்டை காட்சிகளைப் படமாக்கி கொண்டிருந்த போது சினிமா சண்டை பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்தில் சண்டை பயிற்சியில் ஈடுபட்டபோது தவறி விழுந்து உயிரிழந்தார். 

இந்த சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் அரங்கேறியது. 

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் 20 அடி உயரத்தில் இருந்து சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இவ்வாறு நிகழ்ந்துள்ளது. 

கீழே விழுந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலைக்கு நுரையீரலில் ரத்த கசிவு ஏற்பட்டு இறந்ததாக தகவல்கள் வெளியானது. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset