செய்திகள் கலைகள்
இயக்குநர் அவதாரம் எடுக்கிறார் கீதாஞ்சலி ஜி: "அறம் பொருள் இன்பம்" மூலமாகத் தமிழ்த் திரையுலகில் கால் பதிக்கின்றார்
கோலாலம்பூர்:
மலேசியாவின் முன்னணி நடிகையான டத்தோ கீதாஞ்சலி ஜி, "அறம் பொருள் இன்பம்" என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் எனப்படும் தமிழ் சினிமாவில் இயக்குநராகக் காலடி எடுத்து வைக்கின்றார்.
3 வெவ்வேறு கதை களத்தைக் கொண்ட இத்திரைப்படத்தில் முதன்மையாக 3 ஆண் கதாநாயகர்களும் 3 பெண் கதாநாயகிகளும் நடிக்கின்றார்கள்.
இத்திரைப்படத்தை டிஎஸ்ஜி கிரியேஷன் சார்பாக ஆர். பிரதீப் குமார் தயாரிக்கின்றார்.
அதோடு ஶ்ரீரங்கம் மீடியா இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரிக்கின்றது.
இதனிடையே "அறம் பொருள் இன்பம்" திரைப்படத்தின் திரைக்கதையை உருவாக்க கீதாஞ்சலி ஜி, 14 மாதங்களை எடுத்து கொண்டுள்ளார்.
இந்தியாவின் டிஎஸ்ஜி கிரியேஷன் நிறுவனத்தின் தலைமை நடவடிக்கை அதிகாரியாக இருப்பவர் பிரதீப் குமார். நடிகர் டிஎஸ்ஜியின் நம்பிக்கைகுரிய நபராகவும் தொடர்ந்து வலம் வருகிறார்.
அதோடு இந்தியாவில் நடிகர் டிஎஸ்ஜியின் சார்பாக பல திரைப்படங்களுக்கான பணிகளையும் பிரதீப் குமார் முன்னெடுத்து வருகின்றார். "பையா", "அயன்" ஆகிய திரைப்படங்களின் மறுவெளியீடு பணிகளையும் சிறப்பாக செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
"அறம் பொருள் இன்பம்" திரைப்படத்தின் அறிமுக மற்றும் பூஜையில் நடிகர் டிஎஸ்ஜி மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இருவரும் கலந்து கொள்கின்றார்கள். ஆதீக் தற்போது அஜித்குமார் நடிக்கும் குட் பேட் ஹைக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக இருக்கின்றார்.
மலேசியா, சிங்கப்பூரில் அதிகமாக கலைத் துறை சார்ந்த படப்பிடிப்புகளில் நடித்து வரும் கீதாஞ்சலி முதல் முறையாக கேமராவிற்கு பின்னால் இருந்து செயல்பட ஆயுத்தமாகி வருகிறார்.
"இயக்குநராக அவதாரம் எடுத்தாலும் மலேசியாவில் தமது நடிப்பு பயணம் தொடரும்." "நடிப்பு என்றுமே என் வாழ்க்கையோடு கலந்தது" என டிஎஸ்ஜியின் மனைவியுமான கீதாஞ்சலி ஜி குறிப்பிட்டார்.
"அறம் பொருள் இனபம்" திரைப்படத்தின் அறிவிப்புகள் வெளிவந்தவுடன் பலர் கீதாஞ்சலி ஜிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மார்க் ஆண்டனி மூலம் 100 கோடி வசூல் சாதனை புரிந்த ஆதீக் ரசிச்சந்திரன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோ தங்களது இன்ஸ்டாகிராமில் வாழ்த்தினை தெரிவித்துள்ளனர்.
தற்போது முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் ஆதீக் ரவிச்சந்திரனிடம் பயிற்சி பெற்றவர் கீதாஞ்சலி ஜி. முன்னதாக கீதாஞ்சலி ஜியின் திறமையும் திரைப்பட தயாரிப்பில் உள்ள ஆர்வமும் ஆதீக் ரவிச்சந்தரனை வெகுவாக கவர்ந்தது. அதோடு பல படங்களில் அவர் உதவி இயக்குநராகவும் இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இறுதியாக ஜெய்வேல்முருகன் இயக்கிய "வருணன்" திரைப்படத்திலும் பணியாற்றினார்.
இயக்குநர் ஆதிக்கின் கீழ் பயிற்சி பெற்றது கீதாஞ்சலிக்கு விலைமதிப்பற்ற அனுபவத்தையும் வழிகாட்டுதலையும் அளித்துள்ளது, மேலும் அவர் தனது திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், அனுபவம் வாய்ந்த நிபுணரிடம் இருந்து திரைப்பட இயக்குநரின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளவும் உதவியது.
திரைப்பட இயக்குநராக கீதாஞ்சலி ஜி. தமது வாழ்க்கையை வடிவமைப்பதிலும், எதிர்கால திட்டத்திற்கு தம்மை தயார் படுத்துவதற்கும் இந்த அனுபவம் அவருக்கு பெரிதும் துணை புரியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
November 22, 2024, 12:46 pm
நம்பிக்கை நட்சத்திர விருது விழா 2024: திறமைக்கு அங்கீகாரம்
November 22, 2024, 12:27 pm
நம்பிக்கை நட்சத்திர விருது விழா 2024: இணைய வாக்களிப்பு தொடங்கியது
November 22, 2024, 10:28 am
ஜிவி சார் இசை நிகழ்ச்சியில் பாடப் போகிறேன்: சைந்தவி
November 20, 2024, 7:18 am
"இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும்...” - மனைவியை பிரிவது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்
November 17, 2024, 4:42 pm
உலக அழகியாக டென்மார்க்கை சேர்ந்த விக்டோரியா கெயர் தெல்விக் தேர்வு
November 17, 2024, 4:21 pm
பார்வதி முதல் நஸ்ரியா வரை: தனுஷ் விவகாரத்தில் நயன்தாராவுக்கு குவியும் ஆதரவு
November 16, 2024, 6:37 pm
தனுஷின் பழிவாங்கும் மனநிலை, போலியான மேடைப்பேச்சு நயன்தாரா பரபரப்பு அறிக்கை
November 14, 2024, 9:23 pm
மலேசியக் கலைஞர்களுடன் ஒன்றிணைந்து இயல் இசை நாடகம் கலவையுடன் மேடை நாடகங்கள் அரங்கேற்றம்: ஓய்.ஜி. மதுவந்தி
November 14, 2024, 3:31 pm