நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

"நீங்க ஸ்டாலின் தாத்தா; தாத்தா இல்ல, நான் வெறும் ஸ்டாலின் தான்": துவக்கப் பள்ளி மாணவியுடன் முதல்வரின் சுவையான உரையாடல் 

சென்னை: 

திருவள்ளூரில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளி சிறுமியிடன் ஜாலியாக பேசும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் திருவள்ளூரில் உள்ள பள்ளியில் இன்று காலை தொடங்கி வைத்தார். 

அந்தப் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து முதல்வர் ஸ்டாலினும் காலை உணவை பள்ளியிலேயே சாப்பிட்டார்.

அப்போது, தனது அருகில் இருந்த சிறுமியிடம் நான் யாரென்று தெரிகிறதா என்று முதல்வர் கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி, ”தெரியும், ஸ்டாலின் தாத்தா” என்று பதிலளித்தார்.
இதனைக் கேட்டவுடன் ஸ்டாலின் தாத்தா இல்ல, வெறும் ஸ்டாலின்தான் என்று சிரிப்புடன் உரையாடினார். 

தற்போது இந்தக் காணொலி இணையத்தில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset