செய்திகள் தமிழ் தொடர்புகள்
சுங்கச்சாவடிகளில் எவ்வளவு கட்டணம் வசூலித்தீர்கள்; எவ்வளவு செலவழித்தீர்கள்? விவரங்கள் உண்டா? சுரண்டலில் ஈடுபட்டுள்ள சுங்கச்சாவடிகளின் புதிய கட்டண உயர்விற்கு கண்டனம்: எம் எச் ஜவாஹிருல்லா
பாபநாசம்:
தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 5% முதல் 7% வரை சுங்க கட்டண உயர்த்தப்பட இருப்பதாகத் தெரிய வருகிறது. இதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவிலேயே மிக அதிகமான சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில்தான் இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சுங்கச்சாவடிகளில் எவ்வளவு கட்டணம் வசூல் செய்யப்பட்டிருக்கிறது அதன் வாயிலாகச் செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்கிற புள்ளி விவரங்கள் இதுவரை வெளிப்படைத் தன்மையோடு அறிவிக்கப்படவில்லை.
இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி பலமுறை கோரிக்கை வைத்துள்ளது. ஃபாஸ்ட் டாக் என்ற பெயரில் வசூலிக்கப்படும் முன் தொகை வாயிலாகப் பெருமளவில் பொருளாதாரம் வாகன உரிமையாளர்களிடமிருந்து சுரண்டப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் தமிழ்நாட்டில் 25 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட இருக்கிறது.
இந்தக் கட்டண உயர்வின் வாயிலாகப் பேருந்து கட்டண உயர்வு மற்றும் வாடகை வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்படுவதோடு விலைவாசிகளின் உயர்வும் தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரந்தூர் சுங்கச் சாவடியில் கூடுதலாக ரூபாய் 28 கோடி வசூல் செய்தது என இந்தியத் தலைமை கணக்காயர் அறிக்கை அளித்ததும் கவனிக்கத்தக்கது
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் என்எச்ஏஐ எனும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாகச் சுங்க கட்டண உயர்வினைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவிக்க நேரிடும் என்று பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
November 20, 2024, 6:06 pm
திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறு மலேசியாவில் இருந்து தாயகம் திரும்பிய பெண் நடுவானில் உயிரிழப்பு
November 20, 2024, 12:50 pm
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி மீது அடுத்தடுத்து கைது நடவடிக்கை
November 18, 2024, 5:25 pm
அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டம்
November 17, 2024, 4:31 pm
ஹைதராபாத்தில் கைதான நடிகை கஸ்தூரி இன்று சென்னை அழைத்து வரப்படுகிறார்
November 16, 2024, 11:55 am
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை, திருச்சி, மதுரையிலிருந்து விரைவு பேருந்துகள் சேவை தொடக்கம்
November 13, 2024, 7:43 am
கவிக்கோ நினைவலைகள்
November 12, 2024, 2:04 pm
இன்று சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை: பலத்த மழைக்கு வாய்ப்பு
November 11, 2024, 4:20 pm
பாஜகவுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை; இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு: ஜெயக்குமார்
November 10, 2024, 2:50 pm
தெலுங்கர்களை அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவு
November 10, 2024, 9:13 am