நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அமெரிக்காவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

வாஷிங்டன்: 

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
அளிக்கப்பட்டது.

அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக Times Square-கட்டடத்தின் முகப்பில் அவரின் பதாகை காட்சிப்படுத்தப்பட்டது. 

அவரைத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் அமெரிக்க வாழ் தமிழர்கள் நடனமாடி முதலமைச்சரை உற்சாகத்துடன் வரவேற்றனர். நடிகர் நெப்போலியன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய மாநிலங்களுக்குச் செல்கிறார். 

செப்டம்பர் 2-ஆம் தேதி வரை சான்பிரான்சிஸ்கோவிலிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலீட்டாளர்களையும், புலம்பெயர் தமிழர்களையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து சிகாகோவில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உட்பட முக்கிய நிறுவனங்களின் உயர் பொறுப்பில் இருப்பவர்களையும் பார்ச்சூன் 500 பட்டியலிலுள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். 

மேலும், அயலகத் தமிழர்களையும், முக்கிய முதலீட்டாளர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பயணத்தை முடித்துக் கொண்டு வரும் செப்டம்பர் 12- ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

பகிர்
+ - reset