நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மலேசியாவிலிருந்து சென்னை திரும்பிய இளையர் உட்பட 4 பேர் விபத்தில் பலி

சென்னை: 

சென்னை அருகே நிகழ்ந்த விபத்தில் நான்கு இளையர்கள் உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் கோவளம் பகுதியில் உள்ள செம்மஞ்சேரி குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே அந்த விபத்து நிகழ்ந்தது.

முஹம்மத் ஆஷிக், அஸ்ரப் முஹம்மத்,  ஆதில் முஹம்மத், சுல்தான் ஆகிய நான்கு பேரும் தலை, உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இவர்களில் முகம்மது ஆஷிக் அதிகாலை 1.30 மணியளவில் தான் மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார்.

அவரை வரவேற்று அழைத்துச் செல்ல திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த அவரது நண்பர்கள் மூவரும் சென்னை விமான நிலையம் வந்திருந்தனர்.

முகம்மது ஆஷிக் வெளியே வந்ததும் அவரது உடைமைகளை காரில் ஏற்றிக் கொண்டு நேராக வீட்டிற்குச் செல்லாமல் வண்டலூர் வழியாக கேளம்பாக்கம், மாமல்லபுரம் சென்றனர். 

அங்கு சிறிது நேரம் தங்கிவிட்டு, விடியற்காலை 4 மணியளவில் நால்வரும் சென்னையை நோக்கிப் புறப்பட்டனர்.

சென்னை பார்டர் தோட்டம் பகுதியில் முஹம்மத் ஆஷிக்கின் வீடு உள்ளது.

விடியற்காலை 4.40 மணியளவில் வேகமாகச் சென்ற அவர்களின் கார் கோவளம் அருகே சாலைத்தடுப்பில் மோதி, பின்னர் சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லாரியின் மீது மோதியது. 

இதில் கார் கடுமையாகச் சேதமடைந்து நொறுங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset