நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி 

விழுப்புரம்:

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, அந்தத் தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளார் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

ஆரம்பம் முதலே ஆதிக்கம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூலை 13) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது. 

67,757 வாக்குகள் வித்தியாசத்தில்... - 
தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 20 சுற்றுகளாக வாக்கு எண்ணப்பட்டது. முதல் சுற்று முதலே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வந்தார். 

20-வது சுற்றின் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296​​ வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா 10,602 வாக்குகள் பெற்றார். 

நோட்டாவில் 853 வாக்குகள் பதிவானது. 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset