நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம்: மலேசியாவில் 3DotMovies அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தது 

கோலாலம்பூர்: 

இயக்குநர் ஷங்கர் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியன் திரைப்படத்தில் இணைந்தனர்.

இந்தியன் 2 என்று தலைப்பில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த படம் ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

மலேசியாவில் 3DotMovies நிறுவனம் இந்தியன் 2 திரைப்படத்தை வாங்கி வெளியீடு செய்தது. இந்நிலையில் 3DotMovies நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர்களுக்கும் சமூக ஊடக பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் இந்த சிறப்பு காட்சியில் கலந்து இந்தியன் 2 படத்தைக் கண்டுகளித்தனர்.

இந்தியன் 2 திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. அனிருத் இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.மேலும், சேனாபதி வரும் கதாப்பாத்திரத்தில் இந்தியன் (1996) படத்தின் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.

மேலும், இந்தியன் 3 திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று படக்குழுவினர் படத்தின் இறுதி கட்டத்தில் அறிவித்தனர்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset