நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படம் இன்று ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது 

சென்னை: 

இயக்குநர் ஷங்கர்- உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் இன்று ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 

லைக்கா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைத்து இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. மலேசியாவில் இந்தியன் 2 திரைப்படத்தை 3டோட் மூவிஸ் நிறுவனம் வாங்கி வெளியீடு செய்கிறது. 

இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நிலையில் நடிகர்கள் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ஜெகன், ரகுல் ப்ரித் சிங், சமுத்திரகனி, விவேக், மனோபாலா, தம்பி ராமையா, ஆகியோர் நடித்துள்ளனர். 

2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பல வருடங்களின் சவால்களுக்குப் பிறகு இன்று வெளியானது. 

இந்தியன் 2 திரைப்படத்தைத் தொடர்ந்து இந்தியன் 3 திரைப்படமும் அடுத்தாண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset