செய்திகள் மலேசியா
தின்பண்டத்தில் எலி மருந்து: ஆடவருக்கு 6 நாள் தடுப்புக் காவல்
கூலிம்:
எலி மருந்து கலந்து தின்பண்டத்தை இரு சிறார்கள் உண்டச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக ஓர் ஆடவர் இன்று தொடங்கி ஆறு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறார் பாதுகாப்பை அலட்சியப்படுத்தியது தொடர்பில் 611வது சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவு மற்றும் தண்டனைச் சட்டத்தின் 284வது பிரிவின் கீழ் அவ்வாடரைத் தடுத்து வைப்பதற்கான அனுமதியை கூலிம் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மிர்ஸா முஹம்மத் வழங்கினார்.
அந்த ஆடவர் இன்று காலை 8.00 மணியளவில் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கூலிம் லாபு பெசார், கம்போங் பாடாங் உபியிலுள்ள தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த எலி விஷம் தடவப்பட்ட திண்பண்டத்தை உட்கொண்ட இரு சிறார்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மூன்று வயதான Muhammad Akil Syauqi Nur Sufian-னும் அவனது இரண்டு வயது தம்பி Muhammad Luth ஆகிய இருவரும் அத்தோட்டத்தின் வேலியில் வைக்கப்பட்டிருந்த எலி மருந்து தடவப்பட்ட திண்பண்டத்தை உண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
அவ்விரு சிறார்களும் சிகிச்சைக்காகப் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் Muhammad Akil Syauqi Nur Sufian சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.40 மணியளவில் உயிரிழந்தார்.
தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வரும் அவரின் தம்பிக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 27, 2026, 10:54 pm
யூஐடிஎம் ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட பல்கலைக்கழக ஹோல்டிங் நிறுவனங்களை உயர் கல்வியமைச்சு ஆய்வு செய்கிறது: ஜம்ரி
September 27, 2026, 8:36 pm
பேங்காக்கில் உள்ள மலேசியர்கள் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்துகிறது
September 27, 2026, 3:12 pm
நஜிப்பின் வீட்டுக் காவல்; அபராதம் செலுத்த உதவும் நிதித் திரட்டல் 9.25 மில்லியன் ரிங்கிட்டை எட்டியது: ஜாஹித்
September 27, 2026, 3:10 pm
15ஆவது நாடாளுமன்றம் கலைக்கும் வரை தான் ஒருமைப்பாட்டு அரசுக்கு ஆதரவு: ஜாஹித்
September 27, 2026, 1:03 pm
மடானி அரசாங்கத்தில் இருந்து தேசிய முன்னணி உடனடியாக வெளியேற வேண்டும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
September 27, 2026, 11:26 am
நஜிப்பின் நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பு: ஊழலை ஒழிக்கும் கொள்கையை டத்தோஸ்ரீ அன்வார் உறுதியாக ஆதரிக்கிறார்
September 27, 2026, 10:32 am
