நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

டிஎஸ்ஜியைக் கௌரவித்த நாம் கற்ற இசை திரைப்பட இயக்குநர்

கோலாலம்பூர்: 

மலேசியக் கலைத்துறைக்கு ஆதரவளித்து அதன் மேம்பாட்டிற்கு வித்திடும் நபர்களில் டிஎஸ்ஜி என அன்போடு அழைக்கப்படும் டத்தோஶ்ரீ ஜி என்றுமே முதன்மையானவர்.

கடந்தாண்டு வெளியீடு கண்ட "நாம் கற்ற இசை" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மகத்தான ஆதரவைப் பெற்றது. 

முன்னதாகத் திரையரங்குகளிலிருந்து அத்திரைப்படத்தை நீக்கும் சூழ்நிலையில் டிஎஸ்ஜி அத்திரைப்படத்திற்கு மற்றொரு பரிமாணத்தை வழங்கினார். 

அந்த ஆதரவுதான் இத்திரைப்படம் ரசிகர்களைச் சென்றடையக் காரணமாக அமைந்ததாக இயக்குநரும் நடிகருமான சரேஷ், எம்சி தர்ஷன் வெங்கேஷன் ஆகியோர் நன்றியினை நினைவு கூர்ந்தனர்

நாம் கற்ற இசை திரையரங்குகளில் வெளிவந்தபோது டிஎஸ்ஜி தமிழ்த் திரையுலகில் அறிமுகமான மார்க் ஆண்டனி திரைப்படமும் வெளியீடு கண்டிருந்தது. 

இருப்பினும் மலேசிய திரைப்படமும் வெற்றி பெற வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் தோள் கொடுத்தவர் டிஎஸ்ஜி எனச் சரேஷ் புகழாரம் சூட்டினார்.

இந்நிலையில் நாம் கற்ற இசை திரைப்படத்தின் வெற்றி விழா, பிஜே ஸ்டேட் திரையரங்கில் கொண்டாடப்பட்டது. 

இதில் டிஎஸ்ஜி கலந்து கொண்டார்.  அவரின் சேவையை மதிக்கும் வகையில் திரைப்படக் குழுவினர் டிஎஸ்ஜியின் நிழற்படத்தை அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கி அசத்தினார்கள்.

ஆதிக் ரசிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியீடு கண்டு மிகப் பெரிய வெற்றி பெற்ற மார்க் ஆண்டனி  திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரை உலகின் கால்பதித்து வரலாறு படைத்தார் டிஎஸ்ஜி. 

மலேசியாவில் 2.1 மில்லியன் இந்தியர்கள் இருக்கின்றோம். இங்கும் தரமான படைப்புகள் வெளிவருகின்றன. மலேசியாவைத் தவிர்த்து 7 கோடியே 20 லட்சம் தமிழர்கள் வாழும் இந்தியாவை நோக்கியும் நமது திரைப்படங்கள் சிறகு விரிக்க வேண்டுமென டிஎஸ்ஜி வலியுறுத்தினார்.

வெளிநாட்டுத் திரைப்படங்கள் மலேசியாவில் அதிகமான திரையரங்குகளை ஆக்கிரமிப்பு செய்வதால் உள்ளூர் திரைப்படங்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவதையும் டிஎஸ்ஜி இந்த வெற்றி விழாவில் சுட்டிக் காட்டினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset