செய்திகள் உலகம்
பனியில் உறைந்த மலையேற்ற வீரரின் உடல் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு
லிமா:
தென் அமெரிக்க நாடான பெருவில் சுமார் 22 ஆயிரம் அடி உயரம் கொண்ட 'ஹஸ்கரான்' மலை அமைந்துள்ளது.
இந்த மலையில் கடந்த 2002-ம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஸ்டாம்பிள் என்ற மலையேற்ற வீரர் பனிச்சரிவில் சிக்கி மாயமானார்.
பின்னர் நீண்ட நாட்களாகத் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால், தேடுதல் பணி கைவிடப்பட்டது.
இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு வில்லியம் ஸ்டாம்பிளின் உடல் ஹஸ்காரன் மலையிலுள்ள கார்டிலெரா பிளாங்கா மலைத்தொடரில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரது உடல், உடைகள், மலையேற்றக் கருவிகள் மற்றும் காலணிகள் ஆகியவை பனியில் உறைந்து பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரது உடைமைகளிலிருந்த பாஸ்போர்ட் மூலம் வில்லியம் ஸ்டாம்பிளினைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 30, 2026, 3:19 pm
பிரபல ஷாவ்லின் கோவில் முன்னாள் தலைவருக்கு 24 ஆண்டு சிறைத்தண்டனை
May 30, 2026, 11:16 am
தெற்கு சூடானில் மனிதாபிமான பேராபத்து: மக்களுக்கு அவசர உணவு உதவி தேவை என ஐ.நா. எச்சரிக்கை
May 29, 2026, 11:50 am
உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி: ஆளில்லா வானூர்தி பறக்கத் தடை
May 28, 2026, 12:38 pm
இஸ்ரேலிய தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவுத் தலைவர் உயிரிழந்தார்
May 28, 2026, 12:28 pm
“குளிரூட்டும் அமைப்பு கோளாறா?”: ஒரே வார்டில் 6 பச்சிளம் குழந்தைகள் பலி
May 27, 2026, 11:45 am
“அணு சக்தி” ஆற்றலைக் காட்டும் வடகொரியா: புதிய ஏவுகணை சோதனையால் உலக நாடுகள் பதற்றம்
May 27, 2026, 10:25 am
