நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

வாயிலேயே வடை சுடும் அண்ணாமலை 100 நாளில் 500 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என பொய் செய்தி பரப்பும் மிகப்பெரிய அரசியல் ஞானி: எடப்பாடி கடும் தாக்கு  

கோவை:

100 நாளில் 500 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என பொய் செய்தி பரப்பும் வாயிலேயே வடை சுடும் அண்ணாமலை மெத்த படித்த மிகப்பெரிய அரசியல் ஞானி என்று  எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக தாக்கி பேசினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்காக நேற்று காலை கோவை பீளமேடு விமான நிலையம் வந்தார். அங்கு அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு ஏற்கனவே காரணத்தை தெரிவித்துவிட்டோம்.

அப்படி இருந்தும் அண்ணாமலை, அதிமுகவை திட்டமிட்டு குறை சொல்லி வருகிறார். இந்த தேர்தலில் அதிமுக போட்டியிட்டால், 3 அல்லது 4ம் இடம்தான் வரும் எனவும் அவர் கூறியுள்ளார். அவர், மெத்த படித்தவர், மிகப்பெரிய அரசியல் ஞானி. அதனால்தான் அவரது கணிப்பு அப்படி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், விழுப்புரத்தில் அதிமுக வேட்பாளர் சுமார் 6,800 வாக்கு மட்டுமே குறைவாக பெற்றுள்ளார்.

அங்கு, அதிமுக 2ம் இடத்தில் உள்ளது. விக்கிரவாண்டி தேர்தல் புறக்கணிப்புக்கு பல்வேறு காரணங்களை நாங்கள் கூறியிருக்கிறோம். அதிமுகவின் நிலைபாடு குறித்து அவர் விமர்சித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளது போல் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகிறார். அது உண்மை அல்ல. 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ., பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. அப்போது கோவை நாடாளுமன்ற தொகுதியில் அப்போதைய வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளரைவிட 42 ஆயிரம் வாக்கு குறைவாக பெற்றார்.

தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிட்டார். ஆனால், திமுக வேட்பாளரைவிட ஒரு லட்சத்து 18 ஆயிரம் ஓட்டு குறைவாக பெற்றுள்ளார். அப்படி பார்க்கும்போது பாஜ எங்கே வளர்ந்திருக்கிறது? 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணி 18.80 சதவீதம் வாக்கு பெற்றது. ஆனால், தற்போது நடந்த தேர்தலில் பாஜ கூட்டணி 18.28 சதவீதம் வாக்குதான் பெற்றுள்ளது. அதாவது, 0.52 சதவீதம் குறைவாகத்தான் வாக்கு பெற்றுள்ளது.

ஆனால், அவர் தினந்தோறும் பேட்டி கொடுத்துக்கொண்டு இருக்கிறார். பேட்டியிலேயே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு இருக்கிறார். இவர், பாஜ மாநில தலைவராக வந்த பிறகு, ஒன்றிய அரசின் புதிய திட்டங்கள் எதையெல்லாம் தமிழகத்துக்கு பெற்று தந்தார்? எதுவுமே கிடையாது. வாயிலேயே வடை சுட்டுக்கொண்டு இருக்கிறார். எப்போது பார்த்தாலும் பொய் செய்திகளை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்.

மற்ற கட்சிகள் பற்றி அவதூறாக பேசுவதைத்தான் அவர் தொடர்ந்து வழக்கமாக கொண்டுள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் அவர் போட்டியிட்டபோது, 100 நாளில் 500 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி கொடுத்தார். எந்த கட்சி தலைவரும் இப்படி ஒரு வாக்குறுதி கொடுத்தது இல்லை. இப்படி பொய்யான செய்தியை சொல்லி, வாக்கு பெற்றுள்ளார். இப்போது மத்தியில் பாஜ ஆட்சிதான் உள்ளது. 100 நாளில் 500 வாக்குறுதியை நிறைவேற்றுவாரா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுபோன்ற தலைவர்கள் இருப்பதால்தான், 300க்கும் மேற்பட்ட இடங்களை வென்று ஆட்சி அமைத்த பாரதிய ஜனதா கட்சி, இப்போது சறுக்கி, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது. இதை, முதலில் அண்ணாமலை புரிந்துகொள்ள வேண்டும். அவர், தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள அதிமுக பற்றி விமர்சித்து வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset