செய்திகள் தமிழ் தொடர்புகள்
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் டாக்டர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை ஆறு பேர் கொண்ட கும்பல் அவரது இல்லம் அருகில் கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த படுகொலைக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகச் சளைக்காமல் களப்பணி செய்தவர் ஆம்ஸ்ட்ராங். அறிவாற்றல் மிக்க சிறந்த ஆளுமை. எனது பாசமிக்க நண்பராக விளங்கியவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது உறவினர்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படுகொலைக்குக் காரணமானவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை அளிக்க வேண்டும் எனக் கோருகிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 11:37 am
ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
February 5, 2025, 7:04 am
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்: இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப் பதிவு தொடக்கம்
February 4, 2025, 4:17 pm
திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம்: மதுரை மாவட்டம் முழுவதும் இன்று 144 தடை அமல்
February 4, 2025, 12:58 pm
பிப்ரவரி 8இல் ஒன்றிய அரசின் பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
February 4, 2025, 12:23 pm
சென்னையில் லட்சத்தில் 13 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு: ஆய்வில் தகவல்
February 3, 2025, 1:22 pm
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கக் கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
February 2, 2025, 7:33 pm
1967, 1977-ஐ போல் 2026-ல் ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை உருவாக்குவோம்’: விஜய்
January 31, 2025, 12:59 pm