நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தெருவில் திரியும் நாய்களுக்கும், மாடுகளுக்கும் மைக்ரோ சிப் பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: 

சென்னை மாநகராட்சியில் கால்நடைகள், செல்லப் பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த நாய், மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்த அனுமதி அளித்து மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
 
இக்கூட்டத்தில் பேசிய நிலைக்குழு தலைவர்கள், நிலைக்குழு கூட்டத்தில் மாநகராட்சி உயரதிகாரிகள் பங்கேற்பதில்லை என புகார் தெரிவித்தனர். அதற்குப் பதில அளித்த மேயர், நிலைக்குழு கூட்டங்களில் உயரதிகாரிகள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சென்னையில் செல்லப் பிராணிகளின் வளர்ப்பை முறைப்படுத்த, பிரத்யேக மென்பொருளை உருவாக்கி, நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தவும், மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் நவீன மாட்டு கொட்டகைகளில் அடைக்கப்படும் மாடுகளுக்கும் மைக்ரோ சிப் பொருத்தவும், அந்த கொட்டகைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட செயல்முறைகளுக்கும் மன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நேற்றைய கூட்டத்தில் மொத்தம் 112 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset