செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை:
ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியின் ஃபிராங்க் பார்ட் நகரில் இருந்து லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 274 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது.
இந்த விமானம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரை இறங்க வேண்டும்.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த இ மெயில் தகவலில் ஜெர்மன் நாட்டிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலைய பாதுகாப்பு குழுவின் அவசரக் கூட்டம் சென்னை விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் தலைமையில் நடந்தது.
அந்தக் கூட்டத்தில் நள்ளிரவு 12.15 மணிக்கு சென்னையில் தரை இறங்குவதற்காக வந்து கொண்டு இருக்கும் விமானத்தை முழுமையாக சோதனையிட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடிப்படை வீரர்கள், விமான பாதுகாப்பு படையினர் பெருமளவு குவிக்கப்பட்டனர்.
விமானம் நள்ளிரவு 12.16 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரை இறங்கியதும் வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை சோதனை செய்தனர், விமானத்தில் இருந்த பயணிகளின், கைப்பைகள் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டன.
இவ்வாறு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த வெடிகுண்டு சோதனைகள் நடந்தன.
மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளின் முழு சோதனைக்கு பிறகு இது வெறும் வெடிகுண்டு புரளி என்பது தெரிய வந்தது.
இந்த விவகாரம் தொடர்பில் போலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 31, 2025, 4:09 pm
வலம்புரி கவிதா வட்டத்தின் கவியரங்கம்
December 28, 2025, 6:57 pm
தமிழகத்தில் ஜனவரி 3 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
December 28, 2025, 7:49 am
சென்னையில் 100 இடங்களில் ஸ்மார்ட் தானியங்கி சிக்னல்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
December 27, 2025, 8:31 am
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி உத்தரவு
December 26, 2025, 4:35 pm
அதிமுகவில் விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு: எடப்பாடி பழனிசாமி
December 24, 2025, 7:28 am
